தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலின் பேசுவதை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம் - செல்லூர் ராஜு

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பேட்டி குறித்த கேள்விக்கு, என்னிடம் ஏதாவது கேட்க வேண்டியது இருந்தால் கேளுங்கள் என ஆதங்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம் எனத் தெரிவித்தார்.

pavanar 119 birthday celebration
pavanar 119 birthday celebration

By

Published : Feb 7, 2021, 10:42 PM IST

மதுரை: மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் 119ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சாத்தமங்கலத்திலுள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, முதலமைச்சர் பழனிச்சாமி மட்டுமே வரலாற்றுச் சாதனைகளைச் செய்து வருகிறார். ஸ்டாலின் பேசுவதை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம். தேர்தல் அறிக்கையில் மட்டுமே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். ஆனால் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்தையும் செய்து வருகிறார். பயிர்க்கடன் தள்ளுபடிக்கு திருமாவளவன் வரவேற்பு தந்துள்ளார்; மகிழ்ச்சி.

வழக்குகளைக் கண்டு நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை. கனிமொழி உள்பட பல திமுகவினர் சிறைச்சாலையிலிருந்தவர்கள். 20 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பதை மட்டுமே ஸ்டாலின் சொல்லட்டும். துர்காவே சொல்லியுள்ளார். ஸ்டாலின் பெருமாளை விரும்புவார் என்று. இரவு நேரங்களில் ஸ்டாலின் கோயிலுக்குச் செல்வார் என நினைக்கிறேன்.

அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திபு

இவர் ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறார். மக்கள் ஸ்டாலினிடம் கொடுக்கக்கூடிய மனுக்களைப் பிரித்து உரிய துறைகளுக்கு அனுப்புவதற்கே ஒரு மாதங்கள் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை வைப்பதற்கு அனுமதி அளித்துவிட்டோம். திமுகவினரைப் போல குறுகிய எண்ணம் படைத்தவர்கள் நாங்கள் அல்ல” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details