காளவாசல் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மதுரையில் உயர்மட்டப்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் அதிகளவில் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள் தாழ்வான பகுதிகளாகிவிட்டன. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் பருவநிலை மாறி இருக்கிறது. மழை பெய்தால் தொடர்ச்சியாக அதிகமான மழையும், வெயில் அடித்தால் தொடர்ந்து வெயிலும் காய்கிறது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை சிறப்பாக கையாண்டதைப்போல, தற்போதும் சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.