மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டாம் கட்டமாக 31,627 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப் பரிசுடன், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மதுரை செக்காணூரணிப் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், ‘ தூங்குபவர்களை தட்டி எழுப்பலாம், தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப இயலாது. 30 ஆண்டுகளாக அதிமுக அரசு எவ்வாறு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இயங்கியதும், அதனைப் போன்றே தற்போதும் சிறுபான்மையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் இருப்பார் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார் என தெரிவித்தார்.
அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி மேலும், கரும்பு கொள்முதல் விலை குறித்து பேசிய அமைச்சர், விவசாயிகளிடம் விலை குறைத்து வாங்குவது நோக்கமல்ல, விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் வாங்கி மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் என்றும் கூறினார்.