மதுரை விமான நிலையத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது, தேர்தலின்போது திமுக, அதிமுக கட்சியினர் உடன் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி இல்லை என்றால் அவர் வேறு நாட்டிற்குத்தான் செல்லவேண்டும்" என்று பதிலளித்தார்.