தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘கலைஞர் நூலகம் நவீன முறையில் அமையும்’ - அமைச்சர் மூர்த்தி

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் 100 கோடி ரூபாய் செலவில் மிக நவீனமான முறையில் அமையும் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி

By

Published : Sep 22, 2021, 6:19 PM IST

மதுரை: கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்தில் மரங்களை பேதமின்றி மாற்றியமைக்கும் நிகழ்வில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அரையாடை ஏற்று நிகழ்வில் நூற்றாண்டு விழா மதுரையில் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய விடுதலைக்காக காந்தியடிகள் ஆற்றிய பல்வேறு பணிகள் இன்றும் நினைவு கூறப்படுகின்றனர்.

பார் அட் லா (Bar at Law) முடித்த காந்தியடிகள், தான் அணிந்திருந்த பகட்டான ஆடைகளை மதுரையில்தான் துறந்தார். இது மதுரையின் பெருமைக்குரிய வரலாறு. மதுரையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்தில் வளர்ந்துள்ள மரங்களை வேரோடு அகற்றி அவ்வளாகத்திற்குள்ளேயே மற்றொரு பகுதியில் நவீன முறையில் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

இங்கு கலைஞர் நூலகம் அமைப்பதற்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 கோடி ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். மதுரையில் மிக நவீன முறையில் அமையவிருக்கும் கலைஞர் நூலகம், தென் மாவட்டத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இது குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பு செய்வார்” என்றார்.

ஜிஎஸ்டியால் ஏற்படும் இழப்பு

தொடர்ந்து பேரிய அவர், “பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு, மாநில அரசின் நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு இருந்தால் நாங்கள் பரிசீலனை செய்வோம் என நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் ஜிஎஸ்டி வருவதால் ஏற்படும் இழப்பு குறித்து தெரிவித்துள்ளோம். தற்போது ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பெட்ரோல், டீசல், கலால் வரியால் மட்டுமே அதிகளவு வருவாய் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் அரசுக்கு எந்த வகையிலும் இழப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். ஏற்கனவே அரசு 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் இருக்கிறது.

அப்படி இருந்தும்கூட உள்ளாட்சித் துறையின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் செய்துவருகிறார். எனவே படிப்படியாக நிதி நெருக்கடிகளை சமாளித்து பொதுமக்களுக்கு எந்த வகையில் பயனுள்ள திட்டங்களை வழங்க முடியுமோ அவற்றை செய்து வருகிறார்.

வரி ஏய்ப்பு செய்தால் உரிமம் ரத்து

பல ஜவுளிக்கடைகளில் ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது பல கடைகளில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. எங்களது அலுவலர்கள் ஆய்வு இன்று அல்லது நாளை முடிவடையும். பல்வேறு ஜவுளி நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்தி வருகின்றன. அவை வெளியில் வராமல் இருக்கிறது.

பொதுமக்களிடம் வாங்கும் வரியை அரசுக்கு செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதை வெளியுலகிற்குக் கொண்டுவர வேண்டும். பல நிறுவனங்கள் பொதுமக்களிடம் வாங்கும் வரியை செலுத்தாமல் அரசை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஒருவார காலமாக 103 இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த செயல் தொடர்ந்தால் அவர்களது உரிமம் ரத்து செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆய்வு செய்து வருகிறோம். ஒரு வார காலத்தில் அது குறித்த விவரம் தெரிவிக்கப்படும்.

திமுக கூட்டணி வெற்றிப் பெறும்

வணிக வரித்துறையில் அலுவலர் பற்றாக்குறையை எந்த வகையில் பணி அமர்த்தலாம் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது பதவி உயர்வு மூலமாகவும் நிர்வாகத்தின் நிலைக்கு ஏற்றார்போல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வரி வருவாயில் தமிழ்நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி

பல பொருள்களுக்கு ஜிஎஸ்டிக்கான வரி இல்லாமல் வழங்குகிறார்கள். சில பொருள்களுக்கு வரி பெற்றுக்கொண்டு அதை செலுத்துவதில்லை என்பது உங்களுக்கும் தெரியும். ஒருவார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளாட்சித் தேர்தலில் கடந்த நான்கு மாதங்களாக பதவி ஏற்றதில் இருந்து, கடந்த நான்கு மாதங்களாக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்ததைபோல 100 விழுக்காடு உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும்’

ABOUT THE AUTHOR

...view details