தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மேலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு! - MADURAI

மதுரை: கரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மேலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் பி. மூர்த்தி நேற்று (மே.20) ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
மேலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

By

Published : May 21, 2021, 9:42 AM IST

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தோப்பூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details