தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக ஆட்சியில் நிலம் பதிவுசெய்ததில் மோசடி - அமைச்சர் மூர்த்தி - மதுரை அமைச்சர் மூர்த்தி பேச்சு

அதிமுக ஆட்சியின்போது தனியார் நிறுவனம் ஒன்றிற்காக பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பதிவுசெய்ததில் மோசடி நடைபெற்றுள்ளது, இது குறித்து விசாரணைக்குழு அமைக்கவுள்ளோம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி

By

Published : Dec 23, 2021, 6:03 PM IST

மதுரை:தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும் தளைகள் வழங்கும் விழாவினை வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி இன்று (டிசம்பர் 23) தொடங்கிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த மூர்த்தி, “பி.ஏ.சி.எல். (PACL) என்ற தனியார் நிறுவனம் குறைந்த விலைக்கு வீட்டுமனை வழங்குவதாகக் கூறி இந்தியா முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மோசடியாகப் பதிவுசெய்துள்ளது.

இது குறித்து லோக்தா கமிட்டி கண்டறிந்து, அதனை சிபிஐ விசாரணை நடத்தி மோசடியாகப் பதிவுசெய்யப்பட்ட நிலங்களை விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதனையும் மீறி தமிழ்நாட்டில் சில இடங்களில் நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 3000 ஏக்கர் நிலம் பதிவுசெய்ததில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இது குறித்து முழுமையாகக் கண்டறிய விசாரணைக் குழு அமைப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி பெறவுள்ளோம். இந்தக் குழு விசாரணையின்போது கடந்த ஆட்சியில் எந்தெந்த அரசியல்வாதிகள், அலுவலர்களுக்குத் தொடர்பு இருந்தது என்ற விவரம் தெரியவரும்.

செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி

இதேபோல வணிக வரித் துறையிலும் சில மோசடிகள் நடைபெற்றுள்ளன. அது தொடர்பாக கண்டறிந்து விசாரணை நடத்தி குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் காலமானார்: ஸ்டாலின் நேரில் ஆறுதல்

ABOUT THE AUTHOR

...view details