மதுரை: சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று (ஆக. 19) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம்.
தற்போது, கூட்டுறவு வங்கியில் ஐந்து பவுன் நகைக் கடன் பெற்ற நபர்களின் மூலம் முறைகேடுகள் நடந்திருக்கிறது. எனவே, அதை ஆராய்ந்து தகுதி உடைய நபர்களுக்கு நிச்சயமாக ஐந்து பவுனுக்கு குறைவாக வைத்திருக்கும் நபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதன்படி நிச்சயமாக செயல்படுத்துவோம்" என்றார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் கீழ் நகை வைத்துள்ளவர்களின், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது.