விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில், சிவகாசியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சொந்த செலவில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
சென்னைக்குச் சென்ற மாணவ, மாணவிகளை ஒரு நாள் முழுவதும் அங்கு உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகளும், பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர். பயணத்தை முடித்த மாணவர்கள் மீண்டும் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். அவர்களைப் பெற்றோர்கள் வரவேற்றனர்.