மதுரை:விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த சந்தானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "சூரன்குளம் கிராமம் பிள்ளையார்குளம் கிராம பஞ்சாயத்தின் கீழ் உள்ளது. பிள்ளையார்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கிராமசபை கூட்டத்தை நடத்தினார்.
அறிவிப்பு இல்லாமல் கிராம சபை கூட்டமா..?
பொதுவாக கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதற்கு முன் அது தொடர்பான தகவல் கிராமத்தினருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் பஞ்சாயத்து தலைவர் அறிவிப்பு எதுவும் செய்யாமல் சுமார் 20 பேருடன் கிராம சபைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இது விதிகளுக்கு எதிரானது. ஆகவே கிராமத்தில் உள்ளவர்களுக்கு முறையான அழைப்பு விடுத்து மறு கிராம சபை கூட்டத்தை நடத்த கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மறு கிராம சபை கூட்டம்
ஆகவே விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பிள்ளையார்பட்டி கிராம பஞ்சாயத்தில் மறு கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்!