மதுரை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25 காலை 11:00 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதாக மீனாட்சி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் அருணாச்சலம் கூறிகையில்,
“வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.23 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கின்ற காரணத்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற உள்ள கால சந்தி பூஜை காலத்தில் உச்சி காலம் சாய்ரட்சை ஆசிய பூஜைகள் நடைபெற்று முடிந்தவுடன் திருக்கோயில் நடை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் மற்றும் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும்.
அக்குறிப்பிட்ட நேரத்தின் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை. அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, கிரகண கால அபிஷேகம் நடைபெறும்.