தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அர்ச்சகருக்கு கரோனா - மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் சங்கம் மறுப்பு - priest affected by corona

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு கோயிலின் அர்ச்சகர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

corona_priest
corona_priest

By

Published : Apr 23, 2020, 7:59 PM IST

இது தொடர்பாக மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் சங்கம் கூறுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ள ஒருவரின் தாயாருக்கு கடும் வயிற்றுப்போக்கு, நீரிழிவு நோய் இருந்ததால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வைரஸ் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகள் பெறவில்லை என்றும் முன்னுக்குப் பின் முரணாக முடிவுகள் வெளிவந்ததால் அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அந்த அர்ச்சகரின் குடும்பத்தினரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் வேலை செய்தவர், அக்கம் பக்கத்தினர், அவரது மகன் மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிவதால் பட்டர்கள், பணியாளர்கள், பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர் என அனைவருக்கும் பரிசோதனை செய்ய மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details