தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீனாட்சி அம்மன் கோயில்: நவராத்திரி விழா 2ஆம் நாள் கோலாகலம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான நேற்று வாதவூர் அடிகளுக்கு அம்மன் உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சியளித்தார்.

meenakshi-amman-temple
meenakshi-amman-temple

By

Published : Oct 19, 2020, 7:28 AM IST

பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம் என ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விழா கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு நவராத்திரி உற்சவ விழா தொடங்கியுள்ளது. இந்த விழா அக்.25ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

ஊரடங்கு காரணமாக கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நவராத்திரி விழாவையொட்டி அம்மன் நாள்தோறும் விதவிதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அதன்படி நேற்று (அக்.19) வாதவூர் அடிகளுக்கு அம்மன் உபதேசம் செய்த அலங்காரத்தில் காட்சியளித்தார். அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நவராத்திரியின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேக அலங்காரம் அக்.24ஆம் தேதி நடைபெறும்.

இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வருமானம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details