மதுரை:திருமங்கலம் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தில் கருப்பையா முத்தையா கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெறும். இதில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இது ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய திருவிழாவாகும்.
இந்நிலையில், நேற்று முத்தையா கோயில் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட கிடாய் ஆடுகள் வெட்டப்பட்டன. பின்னர், சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு ஆண்கள் மட்டும் சாப்பிட்டனர்.