மதுரை:ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக திரைப்படஇயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி பா. இரஞ்சித் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்தார்.
அதில், "2019 ஜூன் 5 அன்று நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து உண்மைகள் சிலவற்றைக் குறிப்பிட்டேன்.
வரலாற்றுத் தகவல்கள்
நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின், ‘செந்தமிழ் நாட்டு சேரிகள்’ என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.
பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன்.
வழக்கை ரத்துசெய்க