தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தடுப்பு பணிகளில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யாமல் ஆலோசனை வழங்க வேண்டும் - அமைச்சர் மூர்த்தி - dmk minister

கரோனா தடுப்பு பணிகளில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யாமல் ஆலோசனை வழங்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி  ஆய்வு
அமைச்சர் மூர்த்தி ஆய்வு

By

Published : Jun 2, 2021, 8:17 AM IST

பொதுமுடக்கம் காரணமாக மதுரை மாட்டுத்தாவனி மலர் சந்தை செயல்படாமல் உள்ளது. பூ சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து பல்வேறு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையை செயல்படுத்துவதற்காக இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "மாட்டுத்தாவணி மலர் சந்தை ஆம்னி பேருந்து நிலையத்தில் இடம் மாற்றம் செய்து செயல்பட உள்ளதாகவும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மலர் சந்தை செயல்படுத்தத் திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் மூர்த்தி ஆய்வு
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, எதிர்க்கட்சி சட்டமன்ற தொகுதிகளான மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர் மூர்த்தி ஆய்வு
குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் புகார் அளிக்கின்றனர்.பாரபட்சம் காட்டுவதாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் புகார்கள் உடனடியாக சரி செய்யபட்டு வருகின்றன.
அமைச்சர் மூர்த்தி ஆய்வு
கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டங்களில் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்ட நிலையில், மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பிஉதயகுமார் பங்கேற்காதது ஏன் என கேள்வி அமைச்சர் கேள்வி எழுப்பினார். கரோனா தடுப்புப் பணியில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யாமல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details