கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மக்களை காப்பாற்றிக்கொள்ள முகக் கவசம் அணிவதை அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மக்களை காப்பாற்ற முகக் கவச உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இருந்தபோதிலும், ஒருசில கடைகளில் அதிக விலைக்கு முகக் கவசம் விற்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் வாங்கி அணிவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த மதுரை ஐயர் பங்களாவைச் சேர்ந்த இளைஞர் சுந்தரேசன் என்பவர் இதற்கு எளிய தீர்வு ஒன்றை கண்டறிந்துள்ளார்.
முகக் கவசங்களை சுத்திகரிக்கும் கருவி - மதுரை இளைஞரின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு
மதுரை: ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடிய முகக் கவசங்களை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த இளைஞர் சுந்தரேசன் என்பவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
machine
இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "எளிய மக்களும் முகக் கவசம் அணியவேண்டும், அது அவர்களுக்கு பெரிய பாரமாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகக் கவசங்களை சுத்திகரிப்பு செய்ய கருவி ஒன்றை கடந்த ஒரு மாதமாக கடும் முயற்சியில் உருவாக்கியுள்ளேன்.
TAGGED:
madurai engineer sundaresan