தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாரிதாஸ் மீது வழக்குத் தொடுத்த திமுக நிர்வாகிக்கு நோட்டீஸ்! - மதுரை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணை

யூ-ட்யூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்த உமரி சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாரிதாஸ் வழக்கி பதில் மனு தாக்கல் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
மாரிதாஸ் வழக்கி பதில் மனு தாக்கல்-உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

By

Published : Jan 3, 2022, 7:12 PM IST

மதுரை:"NO CAA என வாசலில் கோலம்போட்ட விவகாரம் தொடர்பாக 'காயத்திரி திமுக-பாகிஸ்தான் சேர்ந்துபோட்ட கோலம்' என்ற தலைப்பில் மாரிதாஸ் காணொலி வெளியிட்டு திமுகவைக் களங்கப்படுத்தி திமுவைப் பற்றி அவதூறு பரப்பியுள்ளார்.

இந்தச் செயல் திமுகவைக் களங்கப்படுத்தியதுடன், திமுவைப் பற்றி அவதூறு பரப்பும் நோக்கத்தில் உள்ளது" எனத் தூத்துக்குடி திமுக மாணவரணியைச் சேர்ந்த உமரி சங்கர் என்பவர் தூத்துக்குடி ஜே.எம்.3 நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை எதிர்த்து மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது உமரி சங்கர் வழக்குத் தொடர முகாந்திரம் இல்லை. எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, "மாரிதாஸ் ஒரு அரசியல் விமர்சகர். கருத்துச் சுதந்திரத்தின்கீழ் மாரிதாஸ் பேசியுள்ளார்.

உமரி சங்கர் குறித்து ஏதும் பேசவில்லை. உமரி சங்கருக்கு இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய எந்த முகாந்திமும் இல்லை. எனவே நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்த உமரி சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 19ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:Sivakasi fire accident CM relief fund: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details