மதுரை: ஒத்தக்கடை அடுத்த புதுதாமரைபட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்னும் இளைஞர் அவரது நண்பரால் நேற்று (ஏப். 29) வெட்டி படுகொலை செய்யப்பட்டார். செந்தில்குமார் மீது கடலூர், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாகன திருட்டு, வழிப்பறி, கொள்ளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இளைஞர் கட்டிப்போட்டு கொடூரக்கொலை - மதுரை காவல் துறை
மதுரையின் நண்பனை கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
நண்பனை கட்டிப்போட்டு கொடூர கொலை
இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் கூறுகையில், "புதுதாமரைப்பட்டியில் உள்ள சோலம்பதி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் இந்த கொலையை செய்துள்ளார். இருவருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் செந்தில்குமாரை, அருண்குமார் கட்டிப்போட்டு வெட்டிப்படுகொலை செய்துள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'நெல்லை: மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற மோதலில் மாணவர் உயிரிழப்பு!'