மதுரை:சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சகாயம் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ், அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இச்சூழலில் மக்கள் பாதை அமைப்பின் முக்கிய நிர்வாகிகளோடு கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். கட்சி ஆரம்பிப்பதற்கான தொடக்கப் பணிகளில் இறங்கி இருப்பதாகவும், வெகு விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேளையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சகாயம் ஐஏஎஸ் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்றும், குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் களம் இறங்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.