தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3,000 பனை விதைகளை நட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர்! - volunteers planting palm trees

மதுரை: பனை மரங்களை பாதுகாக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் நீதி மய்யமும் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து தனக்கன்குளத்தில் பனை விதைகளை நட்டனர்.

makkal needhi maiyam volunteers

By

Published : Sep 23, 2019, 9:19 AM IST

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மரம் செடிகளைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்காக பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் மரங்களை நட்டுப் பராமரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனைத்து வகையிலும் பயனளிக்கும் பனை மரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் நீதி மய்யத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

இந்நிகழ்வில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் நீதி மய்யமும். மதுரை கல்லூரி மாணவ மாணவிகளும் இணைந்து, திருப்பரங்குன்றம் அடுத்த தணக்கன்குளத்தில் உள்ள கண்மாய் கரை உட்பட அனைத்து பொது இடங்களிலும் உள்ள கருவேலமரங்களை அகற்றி, 3000க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details