மதுரை ஊமச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கோமதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு மனைவியிடம் வரதட்சணை கேட்டு ஞானவேல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதையடுத்து கணவரின் தொல்லை தாங்காமல் கடந்த 2007ஆம் ஆண்டு கோமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்! - மதுரை மகிளா நீதிமன்றம்
மதுரை: வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோமதியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஞானவேலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க: ரேஷன் கடை ஊழியரிடமிருந்து 5.15 லட்சம் ரூபாய் கொள்ளை