மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் வேணி (60). இவர் தனது மகன் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது சிறிது சிறிதாக அனுப்பிவைத்த பணத்தை தன் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடை நடத்திவரும் மணி என்பவரிடம் கொடுத்துவைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை ஒன்பது லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாகத் தெரிவிக்கிறார். தற்போது அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டபொழுது, மளிகை கடைக்காரர் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மூலம் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று (பிப். 6) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாகனங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய டீசலை தனது உடம்பில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி! அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் அவரைத் தடுத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க...திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...