தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை டூ துபாய் கூடுதல் விமானங்களை இயக்கவுள்ள ஸ்பைஸ்ஜெட்! - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செய்திகள்

மதுரை: விமான நிலையத்திலிருந்து துபாய் செல்வதற்கான கூடுதல் விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2021 ஜனவரி 1 முதல் தொடங்க உள்ளது.

மதுரை டூ துபாய் கூடுதல் விமானங்களை இயக்கவுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!
மதுரை டூ துபாய் கூடுதல் விமானங்களை இயக்கவுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

By

Published : Dec 26, 2020, 10:02 AM IST

மதுரை விமான நிலையத்தில் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உள்நாடு, வெளிநாடு விமான சேவைகள் அனைத்தும் குறைந்த அளவே இயக்கப்பட்டுவந்தன. இந்த நிலையில், தற்போது வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய விமான சேவைகளை அதிகரிக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக "SpiceJet" நிறுவனம் "Air Bubble" ஒப்பந்தத்தின் மூலம் "துபாய் - மதுரை - துபாய்" வழித்தடத்தில் கூடுதல் விமான சேவை வரும் ஜனவரி 1, 2021 முதல் தொடங்கப்படவுள்ளது. வாரத்திற்கு மூன்று நாள்கள் இயக்கப்பட்டுவந்த நிலையில், ஜனவரி 1, 2021 முதல் வாரத்திற்கு நான்கு நாள்கள் (திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்) இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கோவிட்-19 பரிசோதனை கட்டாயம்

ABOUT THE AUTHOR

...view details