நிலவு, மின்னொளியில் மிதந்த தெப்பம் - கண்கொள்ளாத மதுரை தெப்பத்திருவிழா! - தைப்பூசம் - மதுரை தெப்பத் திருவிழா
மதுரை: தெப்பத் திருவிழாவில் நிலவு ஒளியிலும் மின்னொளியிலும் மிதந்த தெப்பத்திலிருந்து அன்னை மீனாட்சியும் ஆலவாய்ச் சொக்கரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
madurai
தைப்பூசத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் உற்சவ திருவிழாவான இன்று (ஜன. 28) மீனாட்சியும் சொக்கரும் பிரியாவிடையோடு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினர்.
அதேபோன்று இன்றும் மூன்றாவது சுற்றாக இரவு 8 மணியளவில் ஒளி வெள்ளத்துடன் தெப்பத்தில் வலம்வந்த சப்பரம் இரவு 9 மணியளவில் மீண்டும் நிலைக்கு வந்தது. பக்தர்கள் அனைவரும் இந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டு அம்மன் மற்றும் சாமியை தரிசனம்செய்தனர்.