தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை - தேனி ரயிலின் கால அட்டவணையில் மாற்றம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

மதுரை தேனி அகல ரயில் பாதையில், கடந்த மே 26-ஆம் தேதி முதல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது முதன்முறையாக அதன் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

மதுரை - தேனி ரயிலின் கால அட்டவணையில் மாற்றம் - மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
மதுரை - தேனி ரயிலின் கால அட்டவணையில் மாற்றம் - மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

By

Published : May 30, 2022, 7:51 PM IST

மதுரை: மதுரை - தேனி - மதுரை ரயில்கள் கால அட்டவணையில் ஜூன் 1 முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையில் இருந்து காலை 08.30 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 08.05 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு தேனி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தேனி - மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 07.35 மணிக்கு வருவதற்குப் பதிலாக இரவு 07.50 மணிக்கு மதுரை வந்து சேரும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை தேனி ரயில் தடத்தில் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டு, சில நாட்களிலேயே கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மதுரை - ராமேஸ்வரம் கூடுதல் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details