தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழக அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மதுரை மாணவர் சாதனை.. - MBBS

தேசிய அளவில் நடைபெறும் நீட் தகுதி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்று மதுரை மாணவர் சாதனை படைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 8, 2022, 7:05 PM IST

மதுரை:இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் ஆயுஷ் (BAMS, BUMS, BHMS, முதலியன) படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு ஆணையம் நேற்றிரவு (செப்.7) வெளியிட்டது. அதில் மதுரையைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா, அகில இந்தியா தரவரிசையில் 30-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் மதிப்பெண்ணையும் பெற்றுள்ளார். இவர் மருத்துவ நுழைவுத் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் பெற்று உள்ளார்.

மாணவர் திரிதேவ் விநாயகா இன்று (செப்.8) செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 'நீட் தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது கருத்துகளைப் புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.

தமிழகத்தில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த சாதனை மாணவர்

அதுவும் தவிர கேள்வி வங்கிகளை ஆன்லைனில் கூர்ந்து படித்தேன். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர் ஆதரவு காரணமாக நான் இந்த நிலையை எட்ட முடிந்ததது' என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் சரிவு

ABOUT THE AUTHOR

...view details