மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கைதி தப்பி ஓடிய நிலையில், காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கிராமம் நாகாச்சிதேவன் நகரைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவர்மீது அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் தகராறு செய்து கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைது செய்ய காவல்துறையினர் தேடின வந்தனர்.
காவல்துறையினர் தேடி வரும் தகவல் அறிந்த மாரீஸ்வரன் திருப்பூருக்கு தப்பி ஓடினார். நேற்று முந்தினம் உச்சிப்புளி பகுதியில் சுற்றித் திரிந்த மாரீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். இதில் கால் முறிவு ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மேல்சிகிச்சைக்காக நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து மாரீஸ்வரன் தப்பினார். மாரீஸ்வரனை தப்பிக்க விட்ட காவலர்கள் ராமமூர்த்தி, தாமோதரனை ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கார்த்திக் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கால் முறிந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாரீஸ்வரன் மருத்துவமனையிலிருந்து தப்பித்தது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை மருத்துவமனையிலிருந்து கைதி தப்பி ஓட்டம் - காவலர்கள் பணியிடை நீக்கம் - கைதி தப்பி ஓட்டம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கைதி தப்பி ஓடிய நிலையில், பணியில் கவனக் குறைவாக இருந்த காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Madurai
இதையும் படிங்க : 4 நாள்களுக்கு முன்பு தப்பி ஓடிய கைதி கைது