தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2021, 2:15 PM IST

ETV Bharat / city

Madurai Periyar Bus Stand: நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் (Madurai Periyar Bus Stand) பகுதியின் நடைபாதையில் ஆக்கிரமித்துவைத்துள்ள கடைகளை அகற்றக் கோரிய வழக்கில், நடைபாதை கடைகளை அகற்றி நான்கு வாரத்தில் அறிக்கைத் தாக்கல்செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை (Madurai Bench of Madras High Court) உத்தரவிட்டது.

Madurai Periyar Bus Stand, மதுரை பெரியார் பேருந்து நிலையம்
Madurai Periyar Bus Stand

மதுரை: திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (Madurai Bench of Madras High Court) பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீர்மிக நகரம் திட்டத்தின்கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் பிரத்யேக நடைபாதைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத சாலைகளை வழங்குவதன் நோக்கமாக பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்பட்டுவருகின்றன.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

மதுரை பெரியார் போருந்து நிலையம் (Madurai Periyar Bus Stand), எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளைக் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புச் செய்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அலுவலர்களுக்கு மனு அனுப்பினேன். அதற்கும் நடவடிக்கை இல்லை. எனவே, மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அடங்கிய அமர்வின் முன் நேற்று (நவம்பர் 16) விசாரணைக்கு வந்தது. நடைபாதை வியாபாரிகள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், "இது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.

மேலும், மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அங்கே கடை வைத்து நடத்திவருகின்றனர். எனவே, நீதிமன்றம் ஏற்கனவே விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்" என வாதிட்டனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நடைபாதையில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்றும், நான்கு வாரங்களுக்குள் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி நீதிமன்றத்திற்கு அறிக்கைத் தாக்கல்செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:உலகளவிலுள்ள ஆராய்ச்சியாளர்களில் இடம்பெற்ற அண்ணா பல்கலை. பேராசிரியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details