மதுரை:மீண்டும் தடுப்பூசி முகாம் தொடங்கிய நிலையில் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
மதுரையில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி முகாம் - பொதுமக்களின் எண்ணிக்கை குறைவு - மதுரை
இரண்டு நாள்களுக்குப் பிறகு மதுரையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) மீண்டும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. அப்போது, போதுமான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
இரண்டு நாள்களுக்குப் பிறகு மதுரையில் நேற்று மீண்டும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. அப்போது, போதுமான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரையில் 2 நாள்களுக்கு முன்பாக சுகாதாரத்துறை தடுப்பூசி இல்லை என அறிவித்திருந்த நிலையில் நேற்று கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி மதுரைக்கு 2000 எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தடுப்பூசி முகாம் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களின் வரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 769 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்று மட்டும் 834 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆக மொத்தம் 3 லட்சத்து 74 ஆயிரத்து 603 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 1660 தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன.
இதையும் படிங்க: நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!