மதுரை:மதுரை விளக்கத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் கீழவெளி வீதியில் உள்ள கடை ஒன்றின் முன்பாக நின்றுகொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடை உரிமையாளர் நாகசங்கர், சுப்பிரமணி ஆகியோரையும் கைது கைது செய்யப்பட்ட இடங்கள்.
பழமையான கட்டடத்தை இடிக்க நோட்டீஸ் அளித்தும் தொடர்ந்து அஜாக்கிரதையாக இருந்ததாக அவர்கள் அனைவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.