தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: முயற்சிகள் கூடுதலாக்கப்பட வேண்டும்' - சு.வெங்கடேசன் - மாநில அரசு ஒன்றிய அரசு தரும் நிவாரணம்

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான அரசின் நிவாரணங்களைப் பெற்றுத் தரும் முயற்சிகள் கூடுதலாக்கப்பட வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

By

Published : Nov 27, 2021, 5:48 PM IST

மதுரை: இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கான மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு தரும் நிவாரணத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் கூடுதலாக்கப்பட வேண்டும்.

இடைவெளி கூடுதலாக உள்ளது

ஏனெனில் நடைபெற்று முடிந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு & கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்ட விவரத்திற்கும் நிவாரணத்திற்காகப் பதிவு செய்துள்ள எண்ணிக்கைக்கும் இடைவெளி கூடுதலாக உள்ளது.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

சமூகப்பாதுகாப்பு துறையின் விவரங்களின் படி மதுரை மாவட்டத்தில் மட்டும் கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 478. அதில் 258 பேர் ஆய்வு செய்யப்பட்டு, இன்னும் 163 பேர் ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அதில் 13 பேருக்கு மட்டுமே நிவாரணத்திற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் உதவ வேண்டும்

நிவாரணம் குறித்த பெரிய அளவில் மக்களிடம் செய்திகள் சென்றடையாத நிலை உள்ளது. கோவிட் நெருக்கடி காலத்தில் இழப்புகள் குறித்து உரிய சான்றிதழ் பெற முடியாதவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் வேண்டுகோள்

மேலும், மதுரை மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணத்திற்காகக் கீழ்க்கண்ட அலுவலர்களிடம் தங்களது விண்ணப்பங்களை வழங்கிடுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

  • முதலமைச்சர் பொது நிவாரண நிதி; A.கணேசன், சமூக பாதுகாப்பு திட்டம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக 3 வது தளம் மதுரை
  • பிரதமர் நிவாரண நிதி; K.ஸ்ரீதர், பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மதுரை' என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details