இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மதுரை - சென்னை இடையே இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பயணிகள் வருகை குறைவால் ரத்து என்பது ஏற்கக்கூடியதல்ல. கொள்ளைநோய் காலத்தில் மக்கள் கூட்டமாக செல்வது தவிர்க்க வேண்டிய ஒன்று. இந்த சூழலில் முழு அளவில் பயணிகள் பயணிக்க எதிர்பார்க்க முடியாது.
பயணிகளின் வருகை குறைவுக்கு காரணம் இரண்டு. ஒன்று மிகவும் தேவையான பயணங்களை மட்டுமே மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசே அறிவித்துள்ளதால், மக்களும் அதனை பின்பற்றுகின்றனர். இன்னொரு காரணம் கட்டுப்படியாகாத கட்டணமாகும். இதே தடத்தில் ஓடக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட இதன் கட்டணம் 35% அதிகமாகும்.