இது தொடர்பாக, கொல்கத்தாவில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் தஜிந்தர் முகர்ஜிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”உங்கள் நிறுவன பாலிசிதாரர்களுக்கு அனுப்பப்படும், பாலிசி புதுப்பித்தல் நினைவூட்டல் கடிதங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு கடிதத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களுக்கு இந்தி தெரியாது. இதனால்தான் 1963 இல் அன்றைய பிரதமர் நேருவால், அலுவல் மொழிச்சட்டம் தமிழக மக்கள் மீது திணிக்கப்படாது என்ற உறுதி மொழி தரப்பட்டது. ஆனால் தங்கள் நிறுவனம், நினைவூட்டல் கடிதங்களையும், பாலிசி பத்திரங்களையும் வாடிக்கையாளர்களின் உணர்வுகளை, தேவைகளை புறக்கணித்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் அனுப்புவது வருத்தமளிக்கிறது.