மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 12 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மேலும் கரோனோ வைரஸ் பாதிப்பைக் கையாளுவது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதையும், கரோனா வைரஸை சீனா எவ்வாறு முழுமையாகக் கட்டுப்படுத்தியது என்பதையும் அறிய வேண்டும். இதற்கு இந்திய பிரதமர் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஏகமனதாக பரிந்துரைத்திருப்பது வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நாடுகள் எதிர்கொள்ளும் மருத்துவ அவசரகால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.
இந்தியாவில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் உண்மையா? விரிவான சோதனைகள் செய்ய இந்தியா இன்னும் ஏன் தயங்குகிறது? மீண்டும் மீண்டும் சோதனை செய்வது மிக முக்கியமானது என்று ஏற்கனவே பல நாடுகள் கூறுகின்றன. ஆனால் இங்கு பலருக்கு சோதனை தேவையில்லை என்று நாம் ஏன் இன்னும் பாசாங்கு செய்கிறோம்? ஜப்பானும் தென் கொரியாவும் பரிசோதனையின் மூலம் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா?
அண்டை நாட்டில் ஒவ்வொரு பத்து லட்சம் பேருக்கு ஆறாயிரத்து 800 நபர்களை சோதிக்கும்போது, நாம் 18 பேரை மட்டுமே சோதிக்கிறோம். ஆரம்பத்தில் அனைவரையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய நிலைப்பாடு மாற்றப்பட்டுள்ளது.
நமக்கு போதுமான கருவிகள் கூட இல்லை. ஆகவேதான் மருத்துவ பரிசோதனைகள் தாமதிக்கப்படுகிறா? இந்தியாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படலாம். 25 லட்சம் பேர் நோய்வாய்ப்படுவார்கள் என்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வல்லுநர்களின் கணிப்புகள் உங்களுக்கு தெரியவில்லை?