தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீனாட்சி அம்மன் கோயில் சார்பாக இரண்டாயிரம் உணவுப் பொட்டலங்கள்!

கரோனா பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் இன்று(மே 13) 2000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

By

Published : May 13, 2021, 11:21 PM IST

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கரோனா பெருந்தொற்று நெருக்கடி நேரத்தில் உணவின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் இயங்கும் கோயில்களில் இருந்து உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, முதல் நாளான இன்று (மே 13) உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சார்பில் 2000 உணவுப்பொட்டலங்கள், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன.

மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள அறிவிப்புப் பலகை
ஏழை, எளிய மக்களுக்காக உணவு வழங்கும் இந்தப் பணி இன்றிலிருந்து நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுமென கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details