மதுரை: இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 'நிர்வாக நலன் கருதி தற்போது இணை ஆணையர் நிலையில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சென்னை திருவேற்காடு, தேவி கருமாரி அம்மன் கோயில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் துணை ஆணையர் நிலைக்கு தற்காலிமாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை, மதுரை இந்து அறநிலையத் துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை இந்து அறநிலையத் துறை இணை ஆணையராக பதவி வகித்த குமரதுரை, திருப்பூர் இந்து அறநிலையத் துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.