மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் நடிப்பில் வெளியாக உள்ளது கர்ணன் என்ற திரைப்படம்.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘பண்டாரத்தி - சக்களத்தி’ என்ற வார்த்தைகள் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. பண்டார சமுதாய மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்களை தாழ்த்தி பேசும் வகையில் உள்ளது. எங்கள் சமுதாய மக்கள் சுதந்திரத்திற்குப் பின்னரும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர்.
சக்களத்தி என்று அந்த பாடல்வரி அமைந்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் வாழும் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம், ஜங்கம் , யோகிஸ்வரர் ஆகிய சமுதாய மக்களின் உணர்வுகளையும், நன்மதிப்பையும் கெடுக்கும் வண்ணம் உள்ளது. இந்தப் பாடல் வரிகள், சினிமா கிராபிக்ஸ் சட்டம் 1952க்கு எதிரானது.
இது ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுப்படுத்தும், நன்மதிப்பை கெடுக்கும் வகையில், பாடல் வரிகள் அமைந்துள்ளன. இந்தப் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று தணிக்கை துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. இது ஏற்புடையதல்ல. சினிமாட்டோகிராபி சட்டத்தின்படி ஏற்புடையது அல்ல.