மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 53ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நீதிபதி ஹேமண்ட் லஷ்மன் கோகலே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர். உடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் சுதா, தேர்வு ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மொத்தமாக 51,528 மாணவ மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி சென்று படித்த மாணவர்களாக 18,890 பேரும், மாணவிகள் 21,648 பேரும், தொலைதூர கல்வியில் படித்த மாணவர்கள் 4,720 மாணவிகள் 5,950 நபர்கள், பி.எச்டி சேர்ந்த 246 மாணவ, மாணவிகள் என்பன பல உட்பட அனைவருக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது.