மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 100% தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 63 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு துணைவேந்தர் கிருஷ்ணன் விருது வழங்கினார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் செயல்படும் சமூக மாற்றத்திற்கான மையம் (Social Transformation Centre) நேற்று (பிப். 15) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் சிறப்புரை
பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். அப்போது, “உலகத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளது. ஆனாலும் உலகத்தரத்தில் ஒரு தனித்தன்மையை அடையாததற்கு காரணம் உயர் கல்வியில் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகள் கிராமத்திற்கு கொண்டுசெல்லாத காரணத்தினால் உலகத் தரத்திற்கு இந்தியாவின் தனித்தன்மையைக் காட்ட முடியவில்லை“ எனக் கூறினார்.
மேலும், “நாம் வளர்வது மட்டும் உண்மையான வளர்ச்சி அல்ல; தன் சமுதாயத்தையும் வளர்ச்சிக்கு கொண்டு செல்வதே உண்மையான வளர்ச்சி” எனத் துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.