தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கள்ளழகர் எழுந்தருளல்: கோயில் வளாகத்திலேயே உருவாக்கப்பட்ட தத்ரூப செட்டிங்ஸ்

மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு கோயில் வளாகத்திலேயே நடைபெற இருப்பதால் அங்கு தத்ரூபமாக செட்டிங்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்திலேயே உருவாக்கப்பட்ட தத்ரூப செட்டிங்ஸ்
Madurai kallalagar festival

By

Published : Apr 26, 2021, 10:18 AM IST

Updated : Apr 26, 2021, 12:16 PM IST

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரைக்கு கள்ளழகர் வேடமிட்டுவரும் சுந்தராஜபெருமாள் சித்ரா பௌர்ணமி நாளில் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வு என்பது மதுரை அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவானாது நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நாளை (ஏப்ரல் 27) கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வு கரோனா ஊரடங்கு காரணமாக ரத்துசெய்யப்பட்டது.

கோயில் வளாகத்தில் உள்ள ஆடி வீதியிலேயே உள் திருவிழாவாகக் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வை நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கள்ளழகர் எழுந்தருளல்:

இதற்காக இந்த ஆண்டு கோயில் வளாகத்திலேயே வைகையாறுபோல செயற்கையாக உருவாக்கி அதில் வைகையாற்று நீரை நிரப்பி அதில் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுவது போன்ற நிகழ்வை நிகழ்த்திக் காட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வான தேனூர் மண்டபம் போன்ற செயற்கை அமைப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோயில் வளாகத்திலயே நடைபெறும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வு அழகர்கோயில் யூ-ட்யூப் பக்கத்திலும் தொலைக்காட்சிகளிலும் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Apr 26, 2021, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details