தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆடி முதல் வெள்ளி: மதுரை மல்லிகையின் விலை உயர்வு - மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன்

ஆடி முதல் வெள்ளி என்பதால் மதுரை மல்லிகையின் விலை இன்று ரூ.1,200 ஆக விலை உயர்ந்தது. இதே விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மல்லிகையின் விலை உயர்வு
மதுரை மல்லிகையின் விலை உயர்வு

By

Published : Jul 22, 2022, 3:12 PM IST

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்கள் ஆன திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

குறிப்பாக மதுரை மண்ணுக்கே உரிய தனி சிறப்பு வாய்ந்த மதுரை மல்லிகை வெளி மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் மதுரை மல்லிகை விற்பனையாகிறது.

மல்லிகையின் விலை உயர்வு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மல்லிகையின் விலை 500-லிருந்து 700 ரூபாய் வரை விக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் ஒரு கிலோ மதுரை மல்லிகை ரூ.1200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சம்பங்கி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.150, பட் ரோஸ் ரூ.100, ரெண்டு மல்லி ரூ.50, முல்லை ரூ.500, பிச்சி ரூ.500 என பிற பூக்களின் விலை சீராக உள்ளது. இதுகுறித்து மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ஆடி முதல் வெள்ளி என்பதால் மதுரை மல்லிகையின் விலை அதிகரித்துள்ளது.

ஆனால் மற்ற பூக்களின் விலை சீராகவே உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மதுரை மல்லிகையின் விலை நிலவரம் இதே அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதையும் படிங்க:'விசைத்தறித்தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற மின் கட்டண உயர்வை திரும்பப்பெறுங்கள்'

ABOUT THE AUTHOR

...view details