தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மல்லிகை பூ விலை அதிகரிக்கும் - பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன்

மதுரை மலர் சந்தையில், மதுரை மல்லிகை பூ விலை கிலோ ரூ.2500க்கு விற்பனையாகிவரும் நிலையில், வரும் நாள்களிலும் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகள் கருத்து
வியாபாரிகள் கருத்து

By

Published : Dec 5, 2021, 2:17 PM IST

மதுரை:மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2500க்கு விற்பனையாகிறது. அடுத்து வரும் நாட்களிலும் விலை அதிகமாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

மதுரை மல்லிகை பூ விலை அதிகரிக்கும்

நாளொன்றுக்குச் சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக மதுரை மல்லிகை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இன்றைய விலை நிலவரம் மதுரை மல்லி ரூ.2500, பிச்சி ரூ.800, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.150, பட்டன்ரோஸ் ரூ.250, செண்டுபூ ரூ.150, செவ்வந்தி ரூ.250, தாமரை ஒன்று ரூ.20 என விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மல்லிகை பூ விலை அதிகரிக்கும்

இதனை தொடர்ந்து மதுரை மலர் சந்தையில் உள்ள சிறிய பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ”மழை காரணமாகப் பூக்களின் வரத்துக் குறைவாக இருப்பதால் இந்த விலையேற்றம். இனிவரும் நாட்களில் முகூர்த்த தினம் என்பதால் அனைத்துப் பூக்களும் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க:இந்தியாவில் ஒமைக்ரான்: தொற்று எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details