மதுரை:ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் 22 வயது இளம் மாணவி சுயேச்சையாக மதுரை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு இன்று மனு தாக்கல்செய்தார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனா. 22 வயதான இவர் எம்ஏ பட்டம் பெற்று தற்பொழுது ஐஏஎஸ் போட்டித் தேர்வுக்குத் தயாராகிவருகிறார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி 28ஆவது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்தார்.
சிறு வயது முதல் மக்களின் அடிப்படை வசதி, மக்களின் வளர்ச்சி மேம்பாட்டில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும், என்ற கனவோடு ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகிவருவதாகக் கூறினார்.
மாணவி மோகனா தேர்வெழுத இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சேவையைச் செய்யும் வாய்ப்பை பெறும் முயற்சியாகத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தன்னைப் போன்ற இளம் பெண்கள் தயக்கம் இல்லாமல் அரசியலுக்கு வந்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் கூறினார்.
வாய்ப்பு மறுத்த திமுக: சுயேச்சையாகக் களமிறங்கிய ஐஏஎஸ் மாணவி இந்நிலையில் திமுக கட்சியில் சீட்டுக்கு முயற்சித்து கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிடுவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: VideoLeak:பட்டியலின மாணவனை அதிக கட்டணம் செலுத்தக் கூறி பேரம் பேசிய தாளாளர்