மதுரையைச் சேர்ந்த ராஜபிரபு என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "எனது எதிர் வீட்டு குடும்பத்தைச் சேர்தவருக்கு திருமணம் செய்து வைக்க நான் உதவினேன். திருமணமான இருவரும் பின்னாளில் விவாகரத்து பெற்றனர். இந்நிலைக்கு நான் தான் இவை அனைத்துக்கும் காரணம் எனக்கருதி,தகராறில் ஈடுபட்ட அவர்கள், ஒருநாள் என் தலையில் கல்லால் தாக்கினர்.
அதனைத் தொடர்ந்து, எனது புகாரின் பேரில், செல்லூர் காவல் துறையினர் அவர்கள் மீது சாதாரணப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், இதுவரை முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடித்து இது குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிறப்பித்த உத்தரவு குற்றவியல் நடைமுறை சட்டப்படி ”பெறப்படும் ஒரு புகாரில், முகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முறைப்படி அதனை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதில், எந்தவித காலதாமமும் இருக்க கூடாது. இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது நியாயமற்றது.
எனவே, இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடித்து விசாரணை அலுவலர் தாமதமின்றி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.