மதுரையை சேர்ந்த முத்துசுமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது மதுரை மாநகராட்சியின் 26ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டேன். 4 வாக்குகள் வித்தியாசத்தில் சொக்காயி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரினேன்.
ஆனால் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளை பாதுகாப்பாக வைக்கக் கோரி, மாவட்ட தேர்தல் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டது. உதவி தேர்தல் அலுவலர் அமிர்தலிங்கம் தேர்தல் விதிகளுக்குட்பட்டு நடந்து கொள்ளவில்லை. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரித்து விரைவாக உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.