ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இயக்குனர் ரஞ்சித்தையும் அவர் சார்ந்த சமூகத்தை மிகவும் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இயக்குனர் ரஞ்சித் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு - high court
மதுரை: இயக்குனர் ரஞ்சித் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த விடுதலை வீரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் வெங்கடேசனின் பேச்சு இரு சமூகத்திற்கிடையே விரோதம் விளைவிக்கும் வகையில் உள்ளதால் அவர் மீது கடுமையான பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்ய நாராயணன், புகழேந்தி அமர்வு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ரஞ்சித் தாக்கல் செய்துள்ள வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டனர்.