மதுரை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் ஒண்றிணைந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "2020ஆம் ஆண்டு நடக்க வேண்டிய பொது மாறுதல் கலந்தாய்வு கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடைவிதிக்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.