தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரர்: கணவரை கண்டுபிடித்துத்தரக் கோரி மனைவி மனு - கணவரை கண்டுபிடித்துத்தரக் கோரி மனைவி மனு

காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரரைக் கண்டுபிடித்துத்தரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரர்
காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரர்

By

Published : Dec 1, 2021, 10:41 PM IST

மதுரை:முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் பட்டாலியனில் (மத்திய ரிசர்வ் காவல் படையில்) பணியாற்றிவந்த எனது கணவர் பாலமுருகனைக் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் காணவில்லை என அவர் பணிபுரியும் இடத்திலிருந்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. ஆகவே எனது கணவரைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details