தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு போட்டிருந்தார். அவரது மனுவில், "கொடைக்கானல் வன விலங்கு சரணாலயம் 608.95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனிடையே கொடைக்கானல், வட்டக்கானல் வருவாய்த்துறை அலுவலர்கள், டால்பின் நோஸ் சுற்றுலாத்தலத்தை அடைய வனப்பகுதி வழியாக சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இப்பகுதியில் சாலை அமைத்தால் இயற்கை சமநிலையை பாதிப்பட்டையும். ஆகவே டால்பின் நோஸ் சுற்றுலாதலத்திற்கு வட்டக்கானலிலிருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்கும் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.